தமிழ் සිංහල English
Breaking News

40 ஆண்டுகள் நீண்ட போராட்டம்… 13 கொலைகளை ஒப்புக்கொண்ட பொலிஸ் அதிகாரி

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை உலுக்கிய கொடூர குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கோல்டன் ஸ்டேட் கொலையாளி என்ற பெயரில் அறியப்பட்டு வந்த பொலிஸ் அதிகாரியான ஜோசப் டிஏஞ்சலோ 13 கொலை குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.

மட்டுமின்றி, 45 துஸ்பிரயோக வழக்குகள் மற்றும் நூற்றுக்கணக்கான திருட்டு வழக்கிலும் ஈடுபட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கலிஃபோர்னியா பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த 1970 மற்றும் 1980 காலகட்டங்களில் டிஏஞ்சலோ இந்த மொத்த குற்றச்செயல்களிலும் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் சுமார் 40 ஆண்டுகளாக பொலிசார் போதிய ஆதாரமின்றி குழம்பிப் போயிருந்த நிலையில், தனியார் இணைய பக்கத்தில் இவர் தொடர்பான செய்தி ஒன்றில் இவரின் மரபணு குறித்து வெளியான செய்தியே இவரை கைது செய்ய காரணமாக அமைந்துள்ளது.

இதனையடுத்து கடந்த 2018-ல் டிஏஞ்சலோ கலிஃபோர்னிய பொலிசாரால் கைது செய்யப்பட்டு தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது 74 வயதாகும் டிஏஞ்சலோ தம் மீது சுமத்தப்பட்டுள்ள மொத்த குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்ட நிலையில், எதிர்வரும் ஆகஸ்டு மாதம் அவருக்கான தண்டனை தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Share this post:

Recent Posts