தமிழ் සිංහල English
Breaking News

வாங்க… என் பக்கத்துல உட்கார்ந்து சொல்லுங்க – ரசிகர்களை ஆசையுடன் அழைக்கும் அடா சர்மா!

சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் அடா சர்மா. ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் ஹீரோயினாக நடித்தவருக்கு, அங்கு பெரிதாக மார்க்கெட் இல்லை. இதனால் அதிக பட்சம் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.

இதையடுத்து தமிழில் பிரபுதேவா நடிப்பில் சக்தி சரவணன் இயக்கிய ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடித்திருந்தார். மும்பையைச் சேர்ந்த தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர் அடா சர்மா தனது சமூகவலைத்தள பக்கம் முழுவதும் கவர்ச்சியான புகைப்படங்களை நிரப்பி வைத்திருப்பவர்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் நேரத்தில் எந்நேரமும் சோசியல் மீடியாவில் குடிமூழ்கி கிடக்கிறார். அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாவில் செம ஹாட் போட்டோ ஒன்றை வெளியிட்டு ” வாங்க.. என் பக்கத்தில் உட்கார்ந்து உங்களுக்கு தெரிந்த நல்ல ஜோக் சொல்லுங்க” என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் சொல்லி அடாவை இம்ப்ரெஸ் பண்ணுங்க..

Share this post:

Recent Posts