தமிழ் සිංහල English
Breaking News

யாழ் – கதிர்காம பாதயாத்திரையினர் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தனர்

கதிர்காம கந்தன் ஆலய உற்சவத்தை முன்னிட்டு யாழ் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பித்த புனித பாத யாத்திரையினர் நேற்று முன் தினம் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தனர் .

இலங்கை நாட்டில் சாந்தி, சமாதனம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் தற்போது நாட்டு மக்களை அச்சுறுத்தித்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோயில் இருந்து விடுபடவேண்டும் என யாழ் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட கதிர்காம கந்தன் ஆலயத்திற்கான பாத யாத்திரை பக்தர்கள் நேற்று முன் தினம் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தனர்

குறித்த பாதயாத்திரையினர் அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று காலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளுடன் கதிர்காமத்தை நோக்கி பயணிக்கின்றனர்.

இதேவேளை யாழ் தொண்டமனாறு செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து ஆறு பேர் கொண்ட பக்த குழுவினர் நேற்று முன் தினம் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் ஸ்ரீ குமாரத்தன் ஆலயத்தை வந்தடைந்தனர்
ஜெயந்திபுரம் ஸ்ரீ குமாரத்தன் ஆலயத்தில் நேற்று காலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளுடன் பாத யாத்திரை பக்த குழுவினர் கதிர்காமத்தை நோக்கி பயணிக்கின்றனர்.
இந்த புனித பாத யாத்திரை பக்த குழுவினர் கதிர்காமம் முருகன் ஆலயத்தினை சென்றடைந்ததும் கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவத்தில் கலந்து சிறப்பிப்பதுடன் தமது பாத யாத்திரையினை நிறைவு செய்யவுள்ளனர்.

Share this post:

Recent Posts