தமிழ் සිංහල English
Breaking News

கொரோனா போல பெருந்தொற்றாக வாய்ப்புள்ள இன்னொரு விதமான காய்ச்சல் சீனாவில்

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் இன்னொரு விதமான காய்ச்சல் அண்மையில் பரவத் தொடங்கியுள்ளதாக தெரியவருகிறது.

பன்றிகளிடையே பரவி வரும் இந்த காய்ச்சலானது எந்த நேரத்திலும் மனிதர்களைத் தாக்கலாம் என்ற ஆபத்து இருந்து வருவதாக சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது இது உடனடியான பிரச்சினை இல்லை என்றாலும், எதிர்வரும் நாட்களில் எப்போது வேண்டுமானாலும் மனிதர்களிடையே பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இக்காய்ச்சல் கொரோனா வைரஸ் தொற்று போல உலகப் பெருந்தொற்றாக மாறும் அச்சுறுத்தல் உள்ளதாக குறித்த காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் தொடர்பில் ஆராய்ச்சி செய்து வரும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வைரஸை G4 EA H1N1 என ஆராய்ச்சியாளர்கள் அழைப்பதுடன், இது புதிய வகையானது என்பதால் மனிதர்களுக்கு இதனை எதிர்கொள்ள நோயெதிர்ப்புத் திறன் இருக்காது எனவும் குறிப்பிடுகின்றனர்.

இந்த வைரஸால் இப்போது வரை பேராபத்து ஏதும் இல்லை என்ற போதும் கூட, இதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய தேவை இருப்பதாக இது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் பேராசிரியர் கிம் செள சாங் குறிப்பிட்டுள்ளார்.

Share this post:

Recent Posts