தமிழ் සිංහල English
Breaking News

இலங்கையில் 4 அதிகாரிகள் அதிரடியாக பணி நீக்கம்!

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து, கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்களுக்கே மீள விற்பனை செய்ததாக கூறப்பட்ட விடயத்தில் பி.என்.பீ எனப்படும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் 4 அதிகாரிகள் சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இரு சார்ஜன்கள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோரே இவ்வாறு பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் சி.ஐ.டி. சிறப்பு விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையில், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளரினால் இந் நால்வரும் பணி இடை நிறுத்தம் செய்யப்ப்ட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Share this post:

Recent Posts