தமிழ் සිංහල English
Breaking News

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி!

மொரகஹகந்த – களுகங்கை மஹவெலி F வலயத்தை இயற்கை விவசாய உற்பத்தி வலயமாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இரசாயன பசளை மற்றும் கிருமிநாசினி இன்றி இயற்கை உரத்தின் மூலம் மரக்கறி, பழங்கள் மற்றும் உப பயிர்கள் இங்கு பயிரிடப்படவுள்ளன.

நீர்ப்பாசனங்களை பாதுகாத்து செயற்றிறனாக நீரை பயன்படுத்தி நீர் வளத்தை பாதுகாப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

பயிர்ச்செய்கைக்கு தேவையான இயற்கை உரத்தை குறித்த வலயத்திலேயே உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அதுவரை, விவசாயிகளுக்கான இயற்கை உரம் அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ளது.

Share this post:

Recent Posts