தமிழ் සිංහල English
Breaking News

8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி; வவுனியாவில் சம்பவம்!

எட்டுகால்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நேற்றையதினம் (27.06.2020) வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா – நெடுங்கேணி, நைனாமடுப்பகுதியில் எட்டுக்கால்களுடனும், மூன்று உடல்களும் கொண்ட ஒரு தலையுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.

இந்த அதிசய ஆட்டுக்குட்டி வழக்கமான முறையில் நான்கு கால்களை கொண்டிருந்தாலும் அதிகமாக மூன்று உடலையும், நான்கு கால்களையும் கொண்டு ஒரு தலையுடன் பிறந்துள்ளது.

குறித்த ஆட்டுக்குட்டியின் உடல்நிலை ஆரம்பத்தில் சீராக காணப்பட்டாலும், இன்று ஆபத்தான ஒரு கட்டத்திலே இருக்கின்றது. ஆயினும் இந்த ஆட்டு குட்டி தற்பொழுது தண்ணீர், உணவுகளை உண்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இப்படி ஒரு அதிசயம் முதன்முதலாக இடம்பெற்றுள்ளதுடன், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் எட்டுகால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

Share this post:

Recent Posts