தமிழ் සිංහල English
Breaking News

ரஷிய உளவு விமானத்தை இடைமறித்த அமெரிக்க போர் விமானங்கள்

அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளும் அவ்வப்போது எதிர் நாட்டின் எல்லைக்குள் ஆளில்லா உளவு விமானங்களை அனுப்பி எல்லைகளை கண்காணிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவின் தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள அல்யூடின் தீவுகளுக்கு அருகே சுமார் 65 நாட்டிகல் மைல் தொலைவில் சர்வதேச வான் எல்லையில் ரஷியாவின் டியூ-142 ரக உளவு விமானம் பறந்தது.

இதையடுத்து, அமெரிக்க விமானப்படைக்கு சொந்த மான எஃப் 22 ரக போர் விமானங்கள் அல்யூடின் தீவுகள் பகுதிக்கு விரைந்து சென்று ரஷிய விமானத்தை நடு வழியிலேயே இடைமறித்தன.

ஆனால், ரஷிய உளவு விமானம் சர்வதேச வான்பரப்பில் பறந்து கொண்டிருந்ததால் அமெரிக்க போர் விமானங்கள் அதை திருப்பி அனுப்பியதாக அமெரிக்காவின் வடக்கு பகுதி விமானப்பாதுக்காப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் அலாஸ்கா வான் பரப்பில் ரஷிய போர் விமானங்கள் அத்துமீறி நுழைய முயற்சித்த சம்பவம் இது 4-வது முறை என அமெரிக்க விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post:

Recent Posts