தமிழ் සිංහල English
Breaking News

கூட்டு ஒப்பந்தத்தையும் அதன் கூட்டாளிக்கட்சிகளையும் கழுவி ஊற்றிய முன்னாள் அமைச்சர்.

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 500 ரூபா சம்பளத்தை வழங்கமுடியும்.” – என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

‘நம்ம அண்ணாச்சி’யுடன் நடைபெற்ற காணொளி மூலமான கலந்துரையாடலின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அதே விடயத்தை இன்று முன்னால் பிரதி நீதியமைச்சரும், முன்னால் மனிதவள நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் புத்திரசிகாமணி அவர்கள் இதே கருத்தை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார்.

தான் மனித வள தலைவராக இருக்கும் போது ஒவ்வொறு பெருந்தோட்ட நிறுவனங்களின் கணக்கறிக்கைகளும் தனக்கு கிடைக்கபெற்றுள்ளதை வைத்து பார்க்கும்போது அந்த நிறுவனங்கள் 2500 ரூபா சம்பளம் வழங்க முடியும், இதை பின்தள்ளி போடுவது கூட்டு ஒப்பந்தமே எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதே சந்தர்ப்பத்தில் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் ஆழுமை செலுத்தும் கட்சி எதுவென மக்கள் நன்கு அறிவார்கள். ஒப்பந்தத்தில் வருடகணக்கிற்கு கையொப்பம்மிட்டுவிட்டு நாடகமாடும் வேளை செய்வது நகைப்புக்குறியது எனவும் அதில் வடிவேல் சுரேஸின் பங்கும் அதிகமெனவும் அவர் குறிப்பிட்டார்.

அதே சந்தர்ப்பத்தில் கடந்த அரசாங்கத்தில் தனக்கு வழங்கப்பட்ட பொருப்புக்களில் தான் மலையக வீடமைப்புக்களை துரிதப்படுத்தி கொடுத்ததும் இதுவரை காலமும் இல்லாத அளவிற்கு புதுப்புது திட்டங்களை உருவாக்கி அதை அரசாங்கத்திற்கு அமைச்சின்  ஊடாக வழங்கி அரசாங்கத்திடமும் , வெளிநாட்டில் இருந்தும் அதிகளவான நிதியினை கொண்டுவந்து பல திட்டங்களை தோட்டப்புறங்களுக்கு செய்து கொடுத்ததை மக்கள் அறிவர் எனவும் தெரிவித்தார்.

Share this post:

Recent Posts