தமிழ் සිංහල English
Breaking News

கருணாவைப் பார்த்து அரசு அஞ்சுகிறது

இராணுவத்தினர் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொலை செய்ததாகக் கூறும் கருணாவைப் பார்த்து அரசு அஞ்சுகிறது என்று திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்து ள்ளார்.அவர் மேலும் கூறுகையில்;

புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணா பிற்காலத்தில் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்.அக்கட்சியின் பிரதித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

அவரை மஹிந்த ராஜபக்ஸ இரண்டு தடவைகள் தேசிய பட்டியல் எம்பியாக நியமித்தார்.இப்படிப்பட்ட கருணா படையினரைக் கொன்று குவித்தமை தொடர்பில் ஒப்புக் கொண்டுள்ளார்.அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசு தயங்குகிறது.

போர் வெற்றியை காட்டி காட்டி வாக்குக் கேட்கும் அரசு அந்தப் போரை வெற்றிகொண்ற படையினரை கொண்று குவித்த கருணாவை ஏன் தண்டிக்க மறுக்கிறது?-என்றார்.

Share this post:

Recent Posts