தமிழ் සිංහල English
Breaking News

2023ஆம் ஆண்டு மகளிர் கால்பந்து

2023ஆம் ஆண்டு மகளிர் கால்பந்து உலகக்கிண்ண தொடரை அவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள், கூட்டாக நடத்தும் என சர்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) அறிவித்துள்ளது.

ஃபிஃபா சபை உறுப்பினர்கள் அளித்த 35 வாக்குகளில் 22 வாக்குகளை அவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்து பெற்றன. கொலம்பியா 13 வாக்குகளைப் பெற்றது.

கொலம்பியா 5.0 இல் 2.8 மதிப்பெண்களையும், அவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்து 4.1 புள்ளிகளையும் பெற்றன.

இதில், மற்ற எட்டு யு.இ.எஃப்.எ உறுப்பினர்களைப் போலவே கால்பந்து சங்கத்தின் தலைவர் கிரெக் கிளார்க் கொலம்பியாவுக்கு வாக்களித்தார்.

ஜூன் மாத தொடக்கத்தில் பிரேஸில் மற்றும் ஜப்பான் உலகக்கிண்ண தொடரை நடத்தும் விருப்பத்திலிருந்து விலகிய பின்னர், ஒரே ஒரு போட்டியாளராக கொலம்பியா இருந்தது.

2023ஆம் ஆண்டு மகளிர் கால்பந்து உலகக்கிண்ண தொடர், ஜூலை முதல் ஒகஸ்ட் வரை நடைபெற உள்ளது.

அத்துடன், 2023ஆம் ஆண்டு மகளிர் கால்பந்து உலகக்கிண்ண தொடரில் 32 அணிகள் முதல் முறையாக பங்கேற்கவுள்ளன. இதுவரை காலமும் 24 அணிகளே பங்கேற்று வந்தன.

2019ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற மகளிர் கால்பந்து உலகக்கிண்ண தொடரில் நெதர்லாந்தை வீழ்த்தி அமெரிக்கா சம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

Share this post:

Recent Posts