தமிழ் සිංහල English
Breaking News

5020 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்

பெய்ஜிங்: 5020 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

விலை:

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி – 799 யுவான் (தோராயமாக ரூ.8500)

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி – 999 யுவான் (தோராயமாக ரூ.11,000)

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி – 1199 யுவான் (தோராயமாக ரூ.13,000)

Redmi 9

சியோமி ரெட்மி 9 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசசர், 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, 5020 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 18வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 13 எம்.பி குவாட் கேமரா செட்டப், 8 எம்.பி செல்பி கேமரா மற்றும் இதர கனெக்டிவிட்டி அம்சங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. கார்பன் பிளாக், மார்டிசின், நியான் ப்ளூ, லோட்டஸ் ரூட் பவுடர் ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது.

Share this post:

Recent Posts