தமிழ் සිංහල English
Breaking News

விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஒருவரையொருவர் விமர்சித்துத் திரிய வேண்டாம்.!

எதிர்வரும் ​பொதுத் தேர்தலில் தாங்கள் விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஒருவரை யொருவர் விமர்சித்துத் திரிய வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கைப் பொதுஜன பெரமுனவின் அனைத்து வேட்பாளர்களிடமும் அறிவித்துள்ளார்.

சில மாவட்டங்களில் சில வேட்பாளர்கள் தாங்களது விருப்பு வாக்குகளுக்காக ஒருவருக்கொருவர் தகாத முறையில் விமர்சித்து வருவதாகவும், கைகலப்பில் ஈடுபடுவதாகவும் பிரதமருக்குச் செய்திகள் வந்து சேர்ந்துள்ளமை தொடர்பில், இலங்கைப் பொதுஜன பெர முனவின் உறுப்பினர்களுடனான பேச்சு வார்த்தையின் போது குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்தல் காலப்பகுதியில் அரசியல்வாதிகளை தொலைக்காட்சிகளுக்கு அழைத்து விவாதிக்க வைப்பது சிறந்த காரியமல்ல.. சிலர் தயாராக வருவார்கள்.. மற்றும் சிலர் விவாதித்தின்போது எதைத்தான் பேசுவது என்று அங்கலாய்ப்பார்கள். எனவே இவ்வாறான விவாதங்களை பொதுவௌிக்குக் கொணராமல் இருப்பதே சிறந்து எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this post:

Recent Posts