தமிழ் සිංහල English
Breaking News

சிறிகொத்தாவில் நடந்தது என்ன?

எதிர்வரும் பொது தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒத்துழைக்க போதில்லை என அந்த கட்சியின் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் தேசிய தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது தேசிய தொழிற்சங்க ஊழியர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த கலந்துரையாடலின் போது தொழிற்சங்க தலைவர்கள் தமது பிரச்சினைகளை முன்வைக்க முற்பட்டபோது, ரணில் விக்ரமசிங்க அந்த இடத்தில் இருந்து வெளியேற முற்பட்டதை தொடர்ந்து குழப்பநிலை ஏற்பட்டது.

இதன்போது கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தேசிய ஊழியர் சங்கம் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த குழப்பநிலையை தொடர்ந்து எதிர்வரும் பொது தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒத்துழைக்க போதில்லை என பல தொழிற்சங்கங்களில் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவம் செய்யும் குழுவினர் சிலர் நேற்று மாலை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Share this post:

Recent Posts