தமிழ் සිංහල English
Breaking News

தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ் மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்..!

நாட்டில் எதிர்பாராத நிலையில் ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்றுநோய் காரணமாக பலர் பாதிக்கப்பட்டிருப்பதோடு நாட்டின் அனைத்து வகையான செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளது கவலையளிக்கின்றது.

இருந்தபோதிலும் அரசாங்கத்தின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் மற்றும் சுகாதாரத் துறையினர், பாதுகாப்புத் துறையினரின் செயற்பாடுகள் மூலம் இந்நிலையை சீர்செய்ய அரசு பலவகையான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

மக்கள் வீணான வதந்திகளை நம்பி அச்சம்கொள்ளாமல், அரசாங்கம் மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் இச்செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் விரைவில் இந்நிலையிலிருந்து விடுபட முடியும். எனவே மக்கள் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்வது மற்றும் பயணங்களை தவிர்க்குமாறும், வீட்டிலிருப்பதும், அடிக்கடி தங்களுடைய கைகளை கழுவி சுத்தம் செய்வதும் மட்டுமல்லாது, குடும்பத்தினர் குழந்தைகள் வயது முதிர்ந்தோருக்கும் இதனை அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

உங்களுடைய பாதுகாப்பு தொடர்பில் மிகவும் அக்கறையாக நடந்து கொள்ளுமாறும், நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்காக இறைவனிடம் பிரார்த்திக்குமாறும், மார்க்க விடயங்களில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அறிவித்தலை பின்பற்றுமாறும் மக்களாகிய உங்களிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Athaullah ALM

தலைவர், தேசிய காங்கிரஸ்.

Share this post:

Recent Posts