தமிழ் සිංහල English
Breaking News

தனித்து போட்டியிடுவதா இல்லையா – சுதந்திரக் கட்சியின் தீர்மானம்

சுதந்திரக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து இன்று தீரமானிக்கப்படும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு எதிராக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிட்டால், தன்மை தோல்வியடைய செய்து விடுவார்கள் என்ற அச்சம் சுதந்திரக் கட்சியினர் மத்தியில் நிலவி வருகிறது.

இதனால், தனித்து போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this post:

Recent Posts