தமிழ் සිංහල English
Breaking News

வீடுகளுக்குள் இருங்கள்; கட்டாய தேவைக்கு ஒருவர் மட்டும் வெளியில் செல்ல ஜனாதிபதி அறிவுரை.!

பொது மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, கட்டாய தேவைக்கு ஒருவர் மட்டும் வெளியில் சென்று வருமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பில் தனது கீச்சக பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள், பொது போக்குவரத்தை பயன்படுத்தவோ, பொது இடங்களில் கூடவோ வேண்டாம்.

கட்டாய தேவைக்கு ஒருவர் மட்டும் வெளியே சென்று, வீட்டிற்குள் நுழைவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவுங்கள். உங்களையும் ஏனையோயும் பாதுகாக்கவும்!- என்றுள்ளது.

Share this post:

Recent Posts