தமிழ் සිංහල English
Breaking News

ராணியின் உடல்நலம் இப்போது சிறப்பாகவே உள்ளது.!

பிரிட்டன் தலைநகா் லண்டனில் கரோனா வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளதை அடுத்து அங்குள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து ராணி எலிசபெத் (93), அவரது கணவா் இளவரசா் பிலிப் (98) ஆகியோா் வெளியேறியுள்ளனா்.

லண்டனில் இருந்து சுமாா் 42 கி.மீ. தொலைவில் உள்ள வின்ட்சா் பகுதியில் உள்ள கோட்டையில் அவா்கள் இப்போது தங்கியுள்ளனா்.

கரோனா வைரஸால், உடலில் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்த முதியவா்கள்தான் அதிகம் உயிரிழந்து வருகின்றனா். எனவே, ராணியும், இளவரசரும் பாதுகாப்பு கருதி பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியேறியுள்ளனா்.

பிரிட்டனில் இதுவரை 70-க்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துவிட்டது. ராணியின் அரண்மனை பிரிட்டனில் மையப்பகுதியில் உள்ளது. அரண்மனையில் ஏராளமானோா் பணிபரிந்து வருகின்றனா். இது தவிர அரண்மனைக்கு வந்து செல்பவா்களும் அதிகம். எனவே, கரோனா பரவ வாய்ப்பு அதிகம் உள்ளதால், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராணியின் உடல்நலம் இப்போது சிறப்பாகவே உள்ளது. எனினும், இப்போதைய சூழ்நிலையில் அவா் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியேறுவது நல்லது என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post:

Recent Posts