தமிழ் සිංහල English
Breaking News

முதல் சுற்றில் பிவி சிந்து வெற்றி!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் பிவி சிந்து முதல் சுற்றில் சீன வீராங்கனையை வீழ்த்தினார்.

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்ஸ் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சீனாவைச் சேர்ந்த பெய்வென் ஷாங்கை எதிர்கொண்டார்.

இதில் பிவி சிந்து 21-14, 21-17 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற போட்டியில் பெய்வென்னிடம் பிவி சிந்து தோற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this post:

Recent Posts