தமிழ் සිංහල English
Breaking News

தென்னிந்திய சினிமாவை விட்டு விலகும் நடிகை .!¬

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில், பவன் கல்யாண் கதாநாயகனாக நடித்து 2010ம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படம் புலி. அந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிகிஷா பட்டேல். குஜராத்தை சேர்ந்தவரான இவர் லண்டனில் பிறந்து வளர்ந்தவர். அழகுடன் கிளாமராகவும் நடிக்கத் தயங்காதவர். அதனால், தென்னிந்திய சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டவர். தமிழில் 2014ம் ஆண்டு வெளிவந்த தலைவன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

கன்னடப் படங்களிலும் நடித்தார். ஆனால், எந்த மொழியிலுமே அவருடைய படத் தேர்வு, கதாபாத்திரத் தேர்வு சரியாக அமையவில்லை. ஆரம்ப காலத்தைத் தவிர அதன்பின் முக்கிய ஹீரோக்களுடன் ஜோடியாக அவர் நடிக்கவேயில்லை. கதாபாத்திரங்களை விடவும் கிளாமருக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார். எனவே, அவரால் இங்கு ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை.

எனவே, தென்னிந்திய சினிமாவை விட்டு விலகும் முடிவை எடுத்துவிட்டாராம். அதோடு மீண்டும் லண்டனுக்கே சென்று செட்டிலாகப் போகிறாராம். கைவசம் ஏழு படங்களை வைத்திருக்கிறாராம். அதை முடிக்கும் வரை லண்டனுக்கும் சென்னைக்கும் பறந்து வருவாராம். அதன்பின் நிரந்தரமாக லண்டனிலேயே இருந்து அங்கு படங்களில் நடிக்கவும், டிவிக்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.

Share this post:

Recent Posts