தமிழ் සිංහල English
Breaking News

“என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

தமிழ் ரசிகர்களுக்கு ஓரளவு தெரிந்த முகமாக வளர்ந்துள்ளார் கேத்தரின் தெரசா. இந்நிலையில் தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்கக் கேட்டு அவரை அணுகியபோது கால்ஷீட் தர மறுத்துவிட்டாராம்.

அதுமட்டுமல்ல, 1 கோடி ரூபாய் சம்பளம் தருவதாகக் கூறியும் கூட கேத்தரின் தெரசா தன் முடிவில் உறுதியாக இருந்துவிட்டாராம்.

அந்த தெலுங்கு படத்தின் நாயகனாக மூத்த நடிகர் என்.டி. பாலகிருஷ்ணா நடிப்பதால்தான் கேத்தரின் நடிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஹைதராபாத் சென்ற அவரிடம் ஏன் பாலகிருஷ்ணாவுடன் நடிக்க மறுத்துவிட்டீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, கேத்தரினுக்குக் கோபம் வந்துவிட்டது.

“என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இப்போது நீங்கள் கேட்கும் கேள்விக்கு அந்த குறிப்பிட்ட படத்தின் தயாரிப்பாளரும் இயக்கநரும்தான் பதில் சொல்லவேண்டும்,” என்று கூறிவிட்டார் கேத்தரின்.

Share this post:

Recent Posts