தமிழ் සිංහල English
Breaking News

அன்னச் சின்னத்தில் களமிறங்க தீர்மானம் – மோதல்களுக்கு மத்தியில் தீர்க்கமான முடிவு எட்டப்பட்டது!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘அன்னம்’ சின்னத்திலேயே போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

புதிய கூட்டணி மற்றும் அதன் சின்னம் குறித்து இறுதி முடிவை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று (செவ்வாய்க்கிழமை) கட்சி தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் கூடியது.

குறித்த செயற்குழு கூட்டத்தினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த மாதம், இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், துணைத் தலைவருமான சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராகவும், புதிய கூட்டணியின் தலைவராகவும் நியமிக்க முடிவு எட்டப்பட்டது.

எவ்வாறாயினும், நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்களில் போட்டியிட புதிய கூட்டணி மற்றும் சின்னம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடையே மோதல்கள் ஏற்பட்டிருந்தன.

இதனை அடுத்து இடம்பெற்ற பல கூட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத்  தேர்தலில் அன்ன சின்னத்தில் போட்டியிடுவதென  இறுதி முடிவு   எட்டப்பட்டுள்ளது.

Share this post:

Recent Posts