தமிழ் සිංහල English
Breaking News

ஐ. தே .காவின் சின்னம் எதுவாயினும் நமக்கென்ன? அந்தக் கட்சியுடன்தான் என்றும் கைோப்போம்! – திகாம்பரம்

இலங்கையின் இராணுவத் தளபதி கவேந்திர சில்வா உட்பட அவருடைய குடும்பத்தினருக்கு அமெரிக்காவுக்குள் உட்பிரவேசிக்கத் தடை விதித்திருப்பது குறித்து, தான் தனது பலத்த எதிர்ப்பைத் தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளார் நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள்.

கினிகத்தேன – அம்பகமுவ விளையாட்டுத் திடலில் இடம்பெற்ற, கினிகத்தேன மத்திய மகா வித்தியாலயத்தின் பழை மாணவர் சங்கத்தினரின் பழைய மாணவர் ஒன்றுகூடலின் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே திகாம்பரம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,

இலங்கையில் 30 வருடங்களாக தொடர்ந்து இடம்பெற்றுவந்த கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தவர் கவேந்திர சில்வா. அவ்வாறான ஒருவர் மீது இவ்வாறான குற்றம் சுமத்துவது ஏற்கவியலாத ஒரு விடயமாகும். இதுதொடர்பில் எனது பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கின்றேன்…

ஐக்கிய தேசியக் கட்சி எந்தச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டாலும், அந்தச் சின்னம் தொடர்பில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் எழப் போவதில்லை. இலச்சினை எதுவாயினும் அதன் கீழ் நாங்கள் போட்டியிடுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share this post:

Recent Posts