தமிழ் සිංහල English
Breaking News

மகிந்த கட்சியின் திடீர் முடிவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனி கட்சியாகவும் அதனுடன் தொடர்புடைய சிறிய கட்சிகள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனியாகவும் தேர்தலில் போட்டியிட்டு, பின்னர் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பான திட்டத்தினால் குறித்த சிறு கட்சிகள் பதற்றமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக முன்வைக்கப்பட்டுள்ளதனால் அந்த திட்டத்தின் முதலாவது படியாக ஸ்ரீலசுகவை ஒடுக்குவதற்காக சிறு கட்சிகளின் ஆதரவுடன் அவர்கள் தங்கள் சொந்த திட்டங்களை வைத்திருந்ததே இதற்குக் காரணம் என்றும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீலசுக அவர்களுக்கு இல்லாத மக்கள் சக்தியை காண்பித்து கூட்டணியில் 30% வேட்புமனு மற்றும் அரசில் உயர் அமைச்சரவை பதவிகளை பெறுவதற்கு முயற்சித்து வருவதால், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான திட்டம் முதலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் எழுத்துள்ளதுடன், ஸ்ரீலசுகவுக்கு 30% வேட்புமனு கோட்டாவை வழங்குவது நியாயமற்றது எனவும் அதில் ஒரு பகுதி தமக்கு கிடைக்க வேண்டும் என கூறி மொட்டுடன் இருந்த சிறு கட்சிகள் அதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

இந்த திட்டம் குறித்த விவாதம் முன்னேறும்போது, மொட்டின் ஸ்தாபக உறுப்பினர்களாக இருந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, ஸ்ரீ.ல.சு.க.வும் இதைச் செய்ய முயற்சிக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது, உண்மையில் வாக்குத் தளம் இல்லாத சிறு கட்சிகள் தாய் கட்சியை விட அதிக முன்னுரிமை வாக்குகளைக் காட்டி அதிக அமைச்சர் இலாகாக்களைப் பெற முயற்சிக்கின்றன.

பிரபலமான கலைஞர்கள் மற்றும் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் போன்றோருக்கு வேட்பு மனுக்களை வழங்கவும், மொட்டில் அரசியலில் ஈடுபடும் அரசியல்வாதிகளின் வாய்ப்பை இழக்கவும் தாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரதான கட்சி மாவட்டங்கள் மற்றும் வாக்காளர்களில் நேரம், முயற்சி மற்றும் பணத்தை கட்சிக்காக செலவிட முயற்சிக்கிறது.

எந்தவொரு செலவுமின்றி ஊடகங்கள் மூலம் மட்டுமே அரசியலில் ஈடுபடும் சிறு கட்சிகளின் தேர்தலில் அதிக வாய்ப்புகள் கிடைப்பது நியாயமற்றது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கமைய ஸ்ரீ.ல.சு.க மட்டுமல்ல, சிறு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கமைய இந்த திட்டம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பார்வையில் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருப்பதால் மொட்டுடன் இணைந்துள்ள மகஜன எக்சத் பெரமுன , ஜாதிக நிதகஸ் பெரமுன, பிவிதுரு ஹெல உறுமய போன்ற காட்சிகள் இது தொடர்பாக பதற்றத்தில் இருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Share this post:

Recent Posts