தமிழ் සිංහල English
Breaking News

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பெளத்த வழிபாட்டுத் தலங்கள் தொடர்பில் பிரதமர் அதிரடி நடவடிக்கை…

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் இடங்கள் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களின் எல்லைகளை மாயமிட்டு அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குகள் சிலருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை கூறினார்.

புத்த சாசனம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட அகில இலங்கை பிக்குகள் அமைப்பு இன்று அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்தனர்.

கடலை அண்டிய விகாரைகள், யாழ்ப்பாணத்தின் வரலாற்று இடங்கள், நெடுந்தீவில் உள்ள பண்டைய விகாரை, முல்லைதீவில் உள்ள கருகந்த விகாரை மற்றும் பிற தொல்பொருள் இடங்கள் குறித்து தொல்பொருள் அதிகாரிகளுடன் கலந்துரையாடி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கலாச்சார அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் அறிவுறுத்தியதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share this post:

Recent Posts