தமிழ் සිංහල English
Breaking News

காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு இளவரசர் ஹரி ஆதரவு.!

உலகம் முழுவதும் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு பிரித்தானிய இளவரசர் ஹரி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

சுவீடனை சேர்ந்த 17 வயதன சுற்றுசூழல் ஆரவாளர் கிரேட்டா துன்பெர்க்கினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்களை நேரத்துக்கு எதிரான ஓட்டம் என அளித்துள்ள இளவரசர் அறிவியலை யாராலும் மறுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது பொட்ஸ்வானா விஜயம் செய்துள்ள இளவரசர் ஹரி தனது தாயாரின் மரணத்திற்குப் பின்னர் எல்லாவற்றிலிருந்தும் விலகிச் செல்வதற்கான இடமாக பொட்ஸ்வானா திகழ்வதாகவும் கூறினார்.

பல தசாப்தங்களாக இடம்பெற்று வரும் காடழிப்பைத் தொடர்ந்து சோப் ஆற்றின் கரையில் மரங்களை நடவு செய்வதற்கும் இந்த விஜயத்தின் போது இளவரசர் உதவி செய்து வருகிறார். குறைந்தது 30 ஆண்டுகளாக காலநிலை மாற்றம் தொடர்பான அறிவியல் சான்றுகள் உள்ளதாகவும், அது மேலும் மேலும் வலுவடைந்து வருகிறது எனவும் இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.

Share this post:

Recent Posts