தமிழ் සිංහල English
Breaking News

அமெரிக்காவுக்கு றிசார்ட் பணம் அனுப்பிய விடயத்தை புட்டுப்புட்டாய் வைக்கிறார் முஸம்மில்!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீனின் அமெரிக்க வங்கிக் கணக்கு தொடர்பிலும், அந்தக் கணக்கிற்கு பணம் வைப்பிலிடும் முறை தொடர்பிலும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஸம்மில்.

அவரால் சிங்களத்தில் எழுதப்பட்டுள்ள முறைப்பாடு தமிழில்:

பொலிஸ் மா அதிபர் (பதில் கடமை)
பொலிஸ் தலைமையகம்,
இலங்கைப் பொலிஸ்,
கோட்டை.

பா.உ ரிஷாத் பதியுத்தீனின் அமெரிக்கக் கணக்கிற்கு விரோதமான முறையில் பணம் வைப்பிலிடுவது தொடர்பிலான முறைப்பாடு

2018 ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மற்றும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதிகளுக்கிடையில் அப்போதைய கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சு மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவராக நின்ற ரிஷாத் பதியுத்தீனுக்குச் சொந்தமான ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் வங்கிக் கணக்கொன்றிற்கு ஓர் இலட்சம் அமெரிக்க டொலர்கள் வைப்பிலிடப்பட்டிருப்பதற்கான தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று மேலும் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்கள் வைப்பிலப்படவிருந்ததை த்ஈஷ நிறுவனத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் உறுதியான தகவல்கள் உள்ளன. இந்தத் தகவல்கள் தற்போது ஊடகங்கள் வாயிலாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் ரிஷாத் பதியுத்தீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களும், அவருக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளும் தொடர்பில் கவனம் செலுத்தும்போது, மேற்படி பணக்கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் எனக்குள் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. அவருக்கு எதிரான பல குற்றச்சாட்டுக்கள் இந்நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புற்றிருக்கின்றது. மக்களின் நன்மை கருதி இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மிக அவசரமாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என மக்கள் பிரதிநிதி என்ற முறையில் நான் விரும்புகின்றேன்.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்களின் அமெரிக்கக் கணக்கிற்கு பணம் வைப்பிலிடுப்பட்டது தொடர்பில் வெகு விரைவில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கு எனது அதியுயர் பங்களிப்பினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன். இந்த முறைப்பாட்டில் உள்ள தேசிய முக்கியத்துவத்தினைக் கருத்திற்கொண்டு பதில் கடமையாற்றுகின்ற பொலிஸ் மா அதிபராகிய உங்கள் முன் இந்த முறைப்பாட்டினை முன்வைப்பதற்கு எண்ணினேன்.

மொஹொமட் முஸம்மில்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

Share this post:

Recent Posts