தமிழ் සිංහල English
Breaking News

நடுவானில் விமானத்தை இடைமறித்து சோதனை செய்த அதிகாரிகள் கண்ட காட்சி!

வெனிசுலாவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானத்தை அதிகாரிகள் இடை மறித்து ஆய்வு செய்த போது, 500 கிலோ அளவிலான போதை பொருள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெனிசுலா நாட்டில் போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து கொண்டே வருகிறது.

இதனால் இந்த கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் குழுக்களை தடுக்க அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் வான்வெளி எல்லைக்குள் நேற்று அத்துமீறி சந்தேகத்திற்கு இடமாக ஒரு சிறிய ரக விமானம் பறந்து சென்றது.

இதைக் கண்டு துரிதமாக செயல்பட்ட வெனிசுலா நாட்டின் விமானப் படையினர், தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததால், விமானத்த இடைமறித்து, அருகில் இருந்த விமானநிலையத்தில் தரையிரங்க வைத்தனர்.

அதன் பின் விமானத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, உள்ளே சுமார் 500 கிலோ அளவிலான போதை பொருள் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்டதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், விமானத்தை இயக்கி வந்த பிரேசில் நாட்டை சேர்ந்த விமானிகள் இரண்டு பேரையும் கைது செய்தனர்.

வெனிசுலாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 2.5 டன்கள் அளவிலான போதைபொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு போதைபொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post:

Recent Posts