தமிழ் සිංහල English
Breaking News

ரிஷாட் பதியுதீன் கைது!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விரைவில் கைது செய்யப்படலாம் என குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வார இறுதியில் அவரது மன்னாரிலுள்ள இல்லத்தை சோதனை செய்த இரகசிய பொலிஸார், அங்கிருந்து பல ஆவணங்களை மீட்டனர்.

அதில் கடந்த ஆட்சியில் சட்டவிரோதமாக பெற்றுக்கொண்ட காணிகள் அதன் உறுதிப் பத்திரங்கள் என்பன மீட்கப்பட்டுள்ள அதேவேளை, சதொச நிறுவன மோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களும் அவருக்கு முன் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு பிரிவு விரைவில் அழைக்கவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றது.

Share this post:

Recent Posts