தமிழ் සිංහල English
Breaking News

பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்கு மஹிந்தவே தலைவர்; இணைத்தவர்கள் இல்லை!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் உருவாக்கப்படும் புதிய கூட்டணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே தலைவராக இருப்பார். யாரும் இணைத்தவர்களாக நியமிக்கப்பட மாட்டார்கள்.” என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட பல கட்சிகள் இணைந்து உருவாக்கப்படும் கூட்டணியின் இணை தலைவர்களாக மஹிந்த ராஜபக்ஷவும், மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்படுவார்கள் என்று சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் பிரதமர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, “ஒரு கட்சிக்கு ஒரு தலைவர்தான் இருக்கு முடியும். அது கட்சியாக இருந்தால் என்ன, நிறுவனமாக இருந்தால் என்ன, தலைவர் ஒருவராகதான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிக்கல் நிலைமைகளே ஏற்படும். பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி உட்பட பல கட்சிகள் இணைந்து உருவாக்கும் கூட்டணியின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே செயற்படுவார். ஏனைய விடயங்கள் தொடர்பில் பேச தீர்மானித்துக்கொள்ளலாம்.” என்றுள்ளார்.

Share this post:

Recent Posts