தமிழ் සිංහල English
Breaking News

அம்பாறை கரையோர மாவட்டத்தில் மீண்டும்வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக கிளை- அமைச்சர் தினேஸ் குணவர்த்தன உறுதிமொழி.!

அம்பாறை கரையோர மாவட்டத்தில் வேலை வாய்ப்பு பணியகத்தின் கிளை அலுவலகம் ஒன்றை விரைவில் அமைத்து தருவார் என்று வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இன்று செவ்வாய்க்கிழமை உறுதிமொழி வழங்கினார்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களை சேர்ந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்களை அம்பாறை மொண்டி ஹோட்டலில் அமைச்சர் சந்தித்து பேசினார். இதில் மனித கடத்தல்களை தடுப்பது எவ்வாறு? என்று விசேடமாக ஆராயப்பட்டது.

 நாட்டுக்கு நேரடியாக வருமானம் பெற்று தருகின்ற தொழில் துறையாக இது இருக்கின்றது, முகவர்கள் இத்தொழில் துறையில் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை தீர்த்து தர அனைத்து விதமான நடவடிக்கைகளையும் செய்து தருவார் என்று இவர் இதில் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் சங்க தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோது கல்முனையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் கிளை அலுவலகம் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இல்லாமல் செய்யப்பட்டு விட்டது, எனவே மீண்டும் ஒரு கிளை அலுவலகத்தை இப்பிராந்தியத்தில் உருவாக்கி தர வேண்டும் என்று கோரினார்.

அதே போல வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு அனுமதியை பெறுவதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகளை இப்பிராந்தியத்தில் செய்ய கூடிய வகையிலான கட்டமைப்பு இங்குள்ள மக்களின் நலன் கருதி ஏற்படுத்தி தரப்படல் வேண்டும் என்றும் முன்வைத்தார்.   35 முகவர்களின் கையொப்பத்துடன் இக்கோரிக்கைகள் அடங்கிய எழுத்துமூல மனு சம்பிரதாயபூர்வமாக அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. மனுவை பெற்று கொண்ட அமைச்சர் இக்கோரிக்கைகளை நிச்சயம் விரைவாக நிறைவேற்றி தருவார் என்று அமைச்சர் அந்த இடத்திலேயே அறிவித்தார்.

Share this post:

Recent Posts