தமிழ் සිංහල English
Breaking News

யாழ்ப்பாணத்தில் முல்லைத்தீவு இளைஞன் மீது கொலைவெறி தாக்குதல்..!!

யாழ்ப்பாணத்திற்கு வந்த பேருந்து ஒன்றை வழிமறித்த இளைஞர் குழுவொன்று, அதில் பயணித்த இளைஞனை இறக்கி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்று மதியம் கைதடி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்த பேருந்தில் பயணித்த இளைஞனே தாக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடக்கும் பிறந்தநாள் நிகழ்வொன்றிற்கு கலந்து கொள்ள வந்தவரே தாக்கப்பட்டுள்ளார்.

பேருந்தை வழிமறித்த 15 பேர் கொண்ட இளைஞர் குழு, குறித்த இளைஞனை பேருந்தில் இருந்து இறக்கி, அருகிலுள்ள வயல் வெளிக்கு இழுத்துச் சென்று நையப்புடைத்துள்ளது. பின்னர், வீதியோரமாக அவரை போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இளைஞன் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களினால் இந்த தாக்குதல் நடந்திருக்கலாமென கருதும் பொலிசார், அது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share this post:

Recent Posts