தமிழ் සිංහල English
Breaking News

சிம்புவின் புதிய வில்லன் !

சிம்புவுக்கு அவரது குடிப்பழக்கமும், சோம்பேறித்தனம் வில்லன்களாக இருக்கின்றன.எல்லா பெண்களையும் காதலிக்க வேண்டும், தானே சிறந்த காதலன் என்பதை காட்டவேண்டும் என்கிற மனநிலையும் அவருக்கு அடுத்த வில்லன்.

இந்த வில்லன்களை தாண்டி திரைத் தொழிலில் அவருக்கு வில்லன் தனுஷ் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் தனுஷ் சிம்பு இருவருமே நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் கடந்து சிம்புவிற்கு திரைப்படங்களில் நிறைய வில்லன்கள் இருக்கிறார்கள், அவர்கள் பேசப்பட்டும் இருக்கிறார்கள்.

தற்போது தனது தவறான குணாதிசயங்களை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு மாநாடு படத்தில் மிக ஆர்வமாக நடிக்கிறார் சிம்பு இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். தாத்தாவாக எஸ் ஏ சந்திரசேகரன் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் அவரது திரை வில்லனாக முதலில் அரவிந்தசாமி நடிக்க ஒப்புக்கொண்டார். மணிரத்தினத்தின் காற்று வெளியிடை படத்தில் நடித்தபோது சிம்புவும் அரவிந்த்சாமியும் நண்பர்களானார்கள். அதன் அடிப்படையில் அரவிந்தசாமி மாநாடு படத்தில் வில்லனாக நடிக்க முதலில் ஒப்புக்கொண்டார் ஆனால் தற்போது வில்லனாக நடிக்க மறுத்துவிட்டார் இதனால் இயக்குனர் வெங்கட்பிரபு செய்வதறியாது தவித்தார்.

இந்த சமயத்தில் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் ஒரு படம் நடித்து தருவதாக சிம்பு ஒப்புக்கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அதை காரணமாக காட்டி, மாநாடு படத்தில் தனக்கு வில்லனாக நடிக்கும் படி எஸ் ஜே சூர்யாவிடம் சிம்பு கேட்டுக்கொள்ள, தற்போது அரவிந்தசாமிக்கு பதிலாக எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வேண்டுகோளை ஏற்று இந்தப்படத்தில் பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

Share this post:

Recent Posts