தமிழ் සිංහල English
Breaking News

புதிய அரசியல் கட்சி மட்டக்களப்பில்!

இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி’ எனும் புதிய அரசியல் கட்சி மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் முன்னாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தி, கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் ம.செல்வராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி கட்சியின் தலைவராக முன்னாள் பிரதியமைச்சர் சோமசுந்தரம், செயலாளர் கணபதிப்பிள்ளை சிறிஸ்குமார், பொருளாளர் தருமரெட்ணம் தயானந்தன், தேசிய அமைப்பாளர் போராசியரியர் ம.செல்வராசா மற்றும் பிரதேச, மாவட்ட, மாகாண இணைப்பாளர்கள் இதன்போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், நிர்வாகக் கட்டமைப்புக்கள், எதிர்வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்ட விளக்கவுரைகள் இடம்பெற்றன.

Share this post:

Recent Posts