தமிழ் සිංහල English
Breaking News

ரிஷாட் சகோதரரை தீவிரமாக தேடும் சி.ஐ.டி!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பதுர்தீன் மொஹம்மட் ரிப்கான் சி.ஐ.டி. விசாரணைகளை புறக்கணித்து வருதாக அவரை கைது செய்ய தேடி வருகின்றனர்.

மன்னார் – தலை மன்னார் பகுதியில் 240 இலட்சம் ரூபா பெறுமதியான 40 ஏக்கர் காணியை போலி காணி உறுதிகளை தயார் செய்து கையக்கப்டுத்திக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில், வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய ரிப்கான் பதியுதீனைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந் நிலையில் அவரை தேடி வருவதாக சி.ஐ.டி.யினர் மன்றில் தெரிவித்தனர். அதன்படி அவரது வீட்டுக்கு சென்று அவர் தொடர்பில் விசாரித்ததாகவும் அவர் வர்த்தக நடவடிக்கைக்காக கொழும்புக்கு வந்துள்ளதாக அவரது தயார் கூறிய போதும், ரிப்கானின் தொலைபேசியும் செயலிழந்துள்ளதாக சி.ஐ.டி.யினர் மன்றுக்கு தெரிவித்தனர்.

இந் நிலையில் தொடர்ச்சியாக விசாரணைகளை புறக்கணித்துள்ள ரிப்கான் பதியுதீனை கைது செய்ய தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சி.ஐ.டி.யினர் மன்றுக்கு அறிவித்தனர்.

Share this post:

Recent Posts