தமிழ் සිංහල English
Breaking News

சுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு.!

சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ்ஸை ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமை மற்றும் பொய் சாட்சியங்களை முன்வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் கடத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரிடம் கடந்த நாட்களில் நீண்ட வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் குறித்த சுவிஸ் தூதரக அதிகாரியின் மன நலம் தொடர்பில் பரிசோதித்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதற்கமைய அவர் அங்கொடையில் உள்ள மனநல நிருவகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டார்.

அதன்பின்னர் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதற்படி சுவிஸ் தூதரக அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்த போது கைது செய்யப்பட்டார்.

பின்னர், அவர் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this post:

Recent Posts