தமிழ் සිංහල English
Breaking News

13 அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை!

நல்லாட்சி அரசாங்கத்தின் 13 அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று(புதன்கிழமை) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சென்றிருந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நாம் 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அதாவது சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் அரச நிதியில் 150 பில்லியன் ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ள 13 அமைச்சர்கள் தொடர்பாக முறைப்பாடளித்திருந்தோம்.

சுயாதீனமாக இயங்கும் ஆணைக்குழு என்பதால் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று நாம் எதிர்பார்த்தோம். எனினும் அவ்வாறு எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதற்கு முன்னர் இரு தடவைகள் வலியுறுத்தியிருக்கிறார். எனவே மீண்டும் அதனை வலியுறுத்துவதற்காகவே இன்று நாம் வருகை தந்திருக்கின்றோம்.

2015ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் ஆட்சியமைத்த போது இவ்வாறு முறைப்பாடளிக்கப்பட்டது. அவை தொடர்பாக இரு வாரங்களுக்குள் விசாரணைகள் நடத்தப்பட்டு சிறை தண்னையும் வழங்கப்பட்டது.

ஆனால் எம்மால் அளிக்கப்பட்ட முறைப்பாடுகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

அவ்வாறு செயற்படாமல் முறைப்பாடளிக்கப்பட்டவர்களை அழைத்து விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நிலைநாட்டுமாறு கேட்டுக் கொள்கின்றோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share this post:

Recent Posts