தமிழ் සිංහල English
Breaking News

மோடியும் அமித்ஷாவும் மக்கள் விரோதமானவர்கள்:

பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரானவர்கள் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் தொழில் வர்த்தக கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 19 தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை இன்று நடத்தி வருகின்றன. இந்த முழு வேலைநிறுத்ததால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், மேற்குவங்கம், கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த போராட்டம் குறித்து ராகுல் வெளியிட்டுள்ள டுவீட்டில், “ஊழியர்கள் நடத்தும் வேலைநிறுத்த போராட்டத்தை வரவேற்கிறேன். மக்களுக்கம், தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளால் வேலைவாய்ப்பின்மை என்ற பேரழிவு உண்டாகி உள்ளது. மோடி – அமித்ஷா அரசு மக்களுக்கும், தொழிலாளர்களுக்கு எதிரானது. அரசின் கொள்கைகளால் வேலைவாய்ப்பின்மை, பொதுத்துறை நிறுவனங்களை பலவீனமாக்கியது, பொதுத்துறை நிறுவனங்களை தங்களின் தொழில்துறை நண்பர்களுக்கு விற்பனை செய்வது போன்ற பேரழிவுகளை ஏற்படுத்தி உள்ளன. 25 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பந்த்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.” என்றுள்ளார்.

Share this post:

Recent Posts