தமிழ் සිංහල English
Breaking News

பிரிபடாத நாட்டுக்குள் தீர்வைக் காண தமிழ் மக்கள் விரும்புகிறார்கள்: .!

அனைத்து மக்களினதும் பன்முகத் தன்மையையும் சமத்துவத்தினையும் அங்கீகரிக்கும் ஒன்றிணைந்த, பிரி படாத, பிரிக்க முடியாத நாட்டிற்குள் தீர்வொன்றினை எட்ட தமிழ் மக்கள் இன்னமும் தயாராக இருக்கின்றார்கள்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினரு மான எம்.ஏ.சுமந்திரன் தெரி வித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க் கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஒவ்வொரு மக்களின் சமத்துவம் என்பது அவர்களின் எண்ணிக்கையின் பலத்தில் தங்கியிருக்கவில்லை. எமது ஜனநாயகமானது தப்பித்துக்கொள்ளவும் செழிப்படையவும் வெளிப்படையான பேரினவாதத்தை நோக்கி செல்லாமல் இருக்க வேண்டும் என்றால், இந்த கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். நாம் விரும்புவதை மாத்திரம் பொறுக்கிக்கொள்ளாமல் இருப்போமேயாகில் சிங்கப்பூர் ஒரு நல்ல உதாரணம். சிங்கப்பூர் நான்கு தேசிய மொழிகளை கொண்ட நாடு. அவர்களின் தேசிய கீதமானது மொத்த சனத்தொகையில் 15% மாத்திரம் பேசும் மலே மொழியில் இசைக்கப்படுகிறது.” என்றும் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

Share this post:

Recent Posts