தமிழ் සිංහල English
Breaking News

இலங்கை அரசியலில் ரணில் விக்கிரமசிங்கவின் வீழ்ச்சி!

எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டதை தொடர்ந்து, கடந்த 26 வருடங்களாக நாடாளுமன்றத்தில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் என பதவி வகித்து வந்த ரணில் விக்கிரமசிங்க, இப்போது சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்.

இன்று ஐ.தே.கட்சி தலைவர் பதவி அஸ்திரம் மட்டுமே அவர் கைவசம் இருக்கிறது. அதுவும் சொற்ப காலம்தான். இதை விட்டுக் கொடுக்க முடியாது என ரணில் விடாப்பிடியாக இருந்தால், ஐ.தே.கட்சிக்குள் பலத்த நெருக்கடியை எதிர் கொள்வார்.

ஆளும் கோதா+ மகிந்த குளுமமும், ஐ.தே.கட்சிக்கு ரணிலே தலைவராக இருப்பதையே விரும்பும்.

01. பலவீனமான ஒரு தலைவரை எதிர்க்கட்சி கொண்டிருப்பது

02. எதிர்கட்சியை, தொடர்ச்சியான உள் மோதலுக்கும், முரண்பாடுகளுக்கும் வைத்திருப்பதன் மூலம் பலவீன மட்டத்துக்குள் சிக்க வைத்திருத்தல்.

ரணில் கட்சியின் தலைமைப்பதவியை கைவிடாமல் இருக்க எதிர்காலத்திலும் முரண்டு பிடிப்பாராயின் “கணவான் “அரசியல்வாதி , லிபரல் ஜனநாயகவாதி, என அவர் குறித்து கட்டப்பட்ட விம்பங்களை அவரே மேலும் சிதைத்து முடித்தவராயி விடுவார்.

ஏலவே இந்த விம்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிதையத் தொடங்கி விட்டன.சமகாலத்திலும் எதிர்காலத்திலும் ரணில் விக்கிரமசிங்க அம்பலப்பட்டு , ஈற்றில் ரணி
லின் வீழ்ச்சியை வரலாறு சொல்லும்!

Share this post:

Recent Posts