தமிழ் සිංහල English
Breaking News

விமான விபத்துக்கான காரணம்!

சிறிலங்கா விமானப் படைக்குச் சொந்தமான Y-12 ரக விமான விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ, குறித்த விமானம் தாழ்வாகப் பறந்தமையே விபத்துக்குக் காரணமெனவும் தெரிவித்தார்.

சிறிலங்கா விமானப் படைக்குச் சொந்தமான Y-12 ரக விமானம், ஹப்புத்தளையில் விபத்துக்குள்ளாகியதில், நால்வர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், குறித்த விபத்துக்கு விமானம் தாழ்வாகப் பறந்தமையே காரணமெனத் தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், விபத்து தொடர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share this post:

Recent Posts