தமிழ் සිංහල English
Breaking News

பாகிஸ்தான் பந்துவீச்சாளரின் சர்ச்சை.!

விக்கெட்டை வீழ்த்தியதும் கழுத்தை அறுத்துவிடுவதாக செய்கை செய்த பாகிஸ்தான் பந்து வீச்சாளரை இணையதளவாசிகள் கடுமையாக சாடி வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டியான பிக் பாஸ் லீக்கில் வெளிநாட்டு நட்சத்திரங்களும் கலந்துகொண்டு சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுவரை தேசிய அணியில் தேர்வு செய்யப்படாத பாகிஸ்தானை சேர்ந்த ஹரிஸ் ரவூப், மூன்று போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.
Melbourne Stars அணிக்காக விளையாடி வரும் 26 வயதான ஹரிஸ், விக்கெட்டுகளை வீழ்த்திய பின்னர் தனது கழுத்தில் கைவைத்து, ‘கழுத்தை அறுத்து விடுவேன்’ என்கிற செய்கையில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று சிட்னி தண்டருக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விக்கெட் எடுத்த பின்னர் சர்ச்சையான செய்கையில் ஹரிஸ் ஈடுபட்டிருந்துள்ளார்.
இந்த வீடியோவானாது தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு இணையதளவாசிகளில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Share this post:

Recent Posts