தமிழ் සිංහල English
Breaking News

நெருக்கடிகளுக்கு 19 ஆவது அரசியலமைப்பு திருத்தமே காரணம் –/!

நாட்டின் நெருக்கடிகளுக்கு 19 ஆவது அரசியலமைப்பு திருத்தமே காரணம் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ’19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்த நிபுணர்களில் ஒருவரான கலாநிதி ஜயம்பதி, இது பெரும் அழிவு என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அனைவரும் உடன்படுவார்களாயின் அது குறித்து மீண்டும் கருத்திற் கொள்ளப்படும். கடந்த அரசாங்கம் செய்த அனைத்து விடயங்களும் அழிவிற்கான ஆரம்பமாக அமைந்துள்ளது.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாரிய நெருக்கடிகளுக்கு மற்றும் பல நெருக்கடிகள் உருவாக காரணமாக அமைந்துள்ளது.

இதன் காரணமாக நாடாளுமன்றில் உள்ள 225 பேரும் சிந்தித்து செயற்படுவார்கள் என நம்புகின்றேன். சிலர் கூறுகிறார்கள் அவ்வாறானவர்கள் இல்லை என.

அவ்வாறானவர்கள் இல்லை என்றால் எதிர்வரும் இரண்டு மூன்று மாதங்களில் அவ்வாறான புத்தி கூர்மையானவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் பொறுப்பு பொதுமக்களுக்கு உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share this post:

Recent Posts