தமிழ் සිංහල English
Breaking News

சேதவத்தை பகுதியில் தீ விபத்து!

கொழும்பு – சேதவத்தை பிரதேசத்திலுள்ள ஆடை களஞ்சியசாலையொன்றில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக களஞ்சியசாலை கட்டடம் முழுமையாக சேதமடைந்ததோடு, கட்டடத்திற்குள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆடைகளும் முழுமையாக தீக்கிறையாகியுள்ளன.

சேதவத்தை – கலுபாலத்திற்கருகில் அமைந்துள்ள ஆடை கஞ்சியசாலையிலேயே இன்று மாலை 4.30 மணியளவில் இவ்வாறு திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

காவல் துறை மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீப்பரவலுக்கான காரணம் இன்று மாலை வரை கண்டறியப்பட்டிருக்கவில்லை.  இத் திடீர் தீப்பரவலினால் உயிர் சேதம் எவையும் ஏற்படவில்லை என்று காவல் துறை  ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியது.

Share this post:

Recent Posts