தமிழ் සිංහල English
Breaking News

சிங்கப்பூருக்கு காணி வழங்கும் ஒப்பந்தத்தில் நாம் கைச்சாத்திடவில்லை!

ஷங்ரில்லா ஹோட்டலுக்கு  அருகாமையில் உள்ள  3 ஹேக்கர்  காணியை சிங்கப்பூர் நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை கடந்த அரசாங்கமே கைச்சாத்திட்டது என அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

அத்துடன் தேசிய வளங்களை தனியார் நிறுவனங்களுக்கும்,  வெளிநாட்டு  நிறுவனங்களுக்கும் வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல,  குறித்த  காணி  சிங்கப்பூர் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கவே  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்ட வகையில் காடாக்கப்பட்டுள்ள தோட்ட  காணிகள் தொடர்பில்  தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கைகள்   கம்பனிகள் மேற்கொள்ளாவிடின் அரசாங்கம் மாற்றுநடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் கூறினார்.

அரசாங்க  தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Share this post:

Recent Posts