தமிழ் සිංහල English
Breaking News

விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணி;.!

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணியொன்று உருவாக்கப்படவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தைப்பொங்கல் தினத்துக்கு முன்னதாக கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்தப் புதிய கூட்டணியில் தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசியக் கட்சி மற்றும் பொது அமைப்புக்கள் அங்கம் வகிக்கவுள்ளன.

இந்தக் கூட்டணியில், அனந்தி சசிதரன் தலைமையிலான தமிழர் சுயாட்சிக் கழகம், பொ.ஐங்கரநேசன் தலைமையிலான பசுமை இயக்கம் என்பவற்றையும் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share this post:

Recent Posts