தமிழ் සිංහල English
Breaking News

நாடு முன்னேற நாட்டு மக்களின் ஒத்துழைப்பு அவசியம்! புத்தாண்டுச் செய்தியில் ரணில்

கடந்த ஆண்டில் தொடங்கியுள்ள ஜனநாயக மற்றும் சிறப்பான பயணம் தொடங்கியுள்ள ஆண்டிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட செயற்பட வேண்டியது நாட்டுமக்களின் பொறுப்பாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, புதுவருட ஆசிச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகக் ஒழுங்கற்ற நாட்டையே நாங்கள் பெற்றிருந்தோம்.

கடந்த காலங்களில், மக்களுக்கு சமூக, அரசியல் மற்றும் மனித சுதந்திரத்தை கொண்டுவருவதற்கும், சர்வதேச அளவில் நம்நாடு கரும்புள்ளியாக இருந்த நிலையை மாற்றுவதற்கும், சீரானதொரு சூழ்நிலையை உருவாக்குவதற்கும், ஒரு நிலையான வளர்ச்சி செயல்முறை மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அடித்தளம் அமைப்பதற்கும் நாங்கள் பணியாற்றியுள்ளோம்.

அதை முன்னெடுத்துச் செல்ல அனைத்து வலிமை, தைரியம் மற்றும் குடியுரிமை சக்தி ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்ற புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Share this post:

Recent Posts