தமிழ் සිංහල English
Breaking News

உனக்கு 17 எனக்கு 26..! வயது மீறிய காதலால் கம்பி நீட்டிய ஜோடிகள்..!!

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தை சார்ந்த 17 வயதுடைய சிறுவன் தனது தாத்தாவின் இல்லத்தில் வசித்து வந்துள்ளான். சிறுவனின் வீட்டருகே உள்ள இல்லத்தில் 26 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கமானது துவக்கத்தில் நல்ல நட்பு நிலையில் இருந்த நிலையில்., இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. மேலும்., காதலுக்கு கண்ணில்லை என்பதை போல வயதையும் பெரிது படுத்தாது இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் அவ்வப்போது வெளியே சென்று வந்தாலும்., வீட்டில் உள்ளவர்கள் இவர்களின் வயதை எண்ணி சந்தேகம் அடையாமல் இருந்துள்ளனர். இருவரும் எவ்விதமான பிரச்சனையும் இன்றி காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில்., இவர்கள் இருவரும் திடீரென மாயமாகியுள்ளனர். இருவரும் வெவ்வேறு சமயத்தில் மாயமானதால் தனித்தனியாக குடும்பத்தினர் தேடி வந்த நிலையில்., இருவரும் ஒரேநேரத்தில் வீட்டினை விட்டு வெளியேறியது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையின் பேரில் இருவரும் காதலித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் இருவரையும் தேடி வருகின்றனர்.

Share this post:

Recent Posts