தமிழ் සිංහල English
Breaking News

ராஜித சேனாரத்ன இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது.!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்னவை இம் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு, நாரேஹன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாத்னவை கண்காணிப்பதற்காக கொழும்பு மேலதிக நீதிவான் ஷலானி பெரேரா சற்று முன்னர் அங்கு சென்றுள்ளார்.

ராஜித்த சேனரத்னவுக்கு பிணை வழங்கப்படும் பட்சத்தில் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இதன்போது மேலதிக நீதிவானுக்கு சுட்டிக்காட்டினர்.

இதன்போதே மேற்கண்ட விடயங்களை கருத்திற் கொண்டு ராஜித்த சேனாரத்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்றிரவு நரேஹன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுதிக்கப்பட்ட ராஜித சேனாரத்ன இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this post:

Recent Posts