தமிழ் සිංහල English
Breaking News

உலக மக்களுக்கு நற்செய்தி கொண்டு வந்த இறை மகனாகவே இயேசுநாதர் திகழ்கிறார்.!

அடிப்படைவாத சக்திகளுக்கு இடமளிக்காது தமது மத விழுமியங்களின் மரபில் வாழ்வதற்கும் மத உரிமைகளை அனுபவிப்பதற்கும் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட முன்வர வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வழமையாக மகிழ்ச்சியாகக் காணப்படும் கிறிஸ்தவர்களின் நத்தார் கொண்டாட்டங்கள் கடந்த வருடம் நடாத்தப்பட்ட ஈஸ்டர்தாக்குதல்களால் இம்முறை வேதனையுடன் கூடியதாகவே பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை நாட்டில் வாழும் கிறிஸ்தவ மக்களுக்கு நான் விடுக்கின்றேன். கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் பக்திபூர்வமான நத்தார் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

உலக மக்களுக்கு நற்செய்தி கொண்டு வந்த இறை மகனாகவே இயேசுநாதர் திகழ்கிறார்.அன்பு, கருணை, இரக்கம் என்பன இறைமகனின் போதனையும் வழிகாட்டல்களுமாகும். அன்னாரின் முன்மாதிரிகள் மக்களுக்கு சிறந்த வழிகாட்டல்களை வழங்குகின்றது எனவும் அவர் விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியுள்ளார்.

Share this post:

Recent Posts